May 13, 2021

“திருநெல்வேலி திருமண்டலத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வேன்” புதிய லே செயலாளராக வெற்றி பெற்ற டி.எஸ்.ஜெயசிங் பேட்டி…

1 min read

தென்னிந்திய திருச்சபையின் சிறந்த திருமண்டலமான திரு நெல்வேலி திருமண்டலத்தை, வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வேன் என்று புதிய லே செயலாளராக வெற்றி பெற்ற டி.எஸ்.ஜெயசிங் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருநெல்வேலி திருமண்டல நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 4 கட்டங்களாக நடைபெற்றது. இறுதி கட்ட தேர்தல் 13ம் தேதி பாளை கதீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்றது.

இதில், தற்போதைய லே செயலாளர் வேதநாயகம் தலைமையில் ஒரு அணியாகவும், தென்காசி மாவட்டம் பரங்குன்றாபுரத்தைச் சேர்ந்த டி.எஸ்.ஜெயசிங் தலைமையில் ஒரு அணியாகவும் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து வாக்குகள் எண்ணப்பட்டன.

இதில், டி.எஸ்.ஜெயசிங் தலைமையிலான அணியினர் அமோக வெற்றி பெற்றனர்.
புதிய லே செயலாளராக டி.எஸ்.ஜெயசிங், உப தலைவராக அவரது அணியைச் சேர்ந்த சுவாமிதாஸ், குருத்துவச் செயலாளராக பாஸ்கர் கனகராஜ், பொருளாளராக ஏ.டி.ஜே.சி.தினகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்னர்.இதனைத் தொடர்ந்து ஜெயசிங் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து,இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

புதிய லே செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தொழிலதிபர் ஜெயசிங், செய்தியாளர்களிடம், “தென்னிந்திய திருச்சபையின் சிறந்த திருமண்டலமான திருநெல்வேலி திருமண்டலத்தை வளர்ச்சியின் பாதைக்கு கொண்டு செல்வேன், வேலை வாய்ப்பு சீனியாரிட்டி முறையில் பணம் வாங்காமல் வழங்கப்படும், நெல்லைத் திருமண்டல ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் என்னால் முடிந்த அளவு பணிகளை செய்வேன்” இவ்வாறு அவர் கூறினார்.

புதிய லே செயலாளருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம், ஓய்வு பெற்ற ஐ.ஜி. ஜாண் நிக்கல்சன், கே.பி.கே.செல்வராஜ், புஷ்பராஜ், அல்பர்ட், டேவிட், நாசரேத் தூய யோவான் பேராலய அசன கமிட்டித்தலைவரும், திருமண்டல பெருமன்ற உறுப்பினருமான செல்வின், திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பில்லிகிரஹாம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை துணை கமிஷனர் மகேஷ்குமார், உதவி கமிஷனர் ஜாண் பிரிட்டோ தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

செய்தியாளர் – நிக்சன்
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *