May 13, 2021

திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் கொண்டாடப்படும் டாக்டர் அம்பேத்கார் 130 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்…

1 min read

திருவண்ணாமலையில், சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கார் அவர்களின் 130 ஆவது பிறந்த நாள் முன்னிட்டு, இன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு தமிழக முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ வுமான, எ.வ.வேலு அவர்கள் மாலை அணிவித்தார். பிறகு ஊர்வலமாகச் சென்று பெரியார் சிலை எதிரில் வைத்துள்ள சட்டமேதை டாக்டர் அம்பேத்கார் படத்திற்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அண்ணல் அம்பேத்கரின் 130வது பிறந்தநாளை போற்றும் வகையில் தியாகி அண்ணாமலை நகரில் எண்ணற்ற தோழர்களின் ஒருங்கிணைப்பில் அண்ணலின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து வாணாபுரம் கிராம மக்களின் ஒருங்கிணைப்பில் டாக்டர் அம்பேத்கரின் திருவுருவப் படங்களுக்கு மரியாதைச் செலுத்தும் வகையில் மாலை அணிவித்தும்… மலர்கள் தூவியும் புகழ் வணக்க முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அக்கிராமத்தின் தோழர்கள் நேர்த்தியாக விழா ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

செய்தியாளா – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *