May 12, 2021

திருவண்ணாமலையில், தெருவில் தேங்கும் கழிவுநீரால் நோய் பரவும் அபாயம் பொதுமக்கள் புகார்…

1 min read

திருவண்ணாமலை
27-வது வார்டு தேனிமலை பகுதியில் கால்வாய் வசதி இல்லாததால், கழிவு நீர் சாலையில் செல்வதால் தொற்றுநோய் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர் .

சிறியவர் முதல் முதியவர் வரை அந்த சாலையை கடந்து தினமும் செல்கின்றனர்.
இந்தப் பகுதி சாலையில் கழிவு நீர் தேங்கி கிடப்பதால், போக்குவரத்துக்கு
இடையூறாகவும் உள்ளது.

எனவே உடனடியாக கால்வாய் வசதி செய்து கழிவுநீர் வெளியேறும் வசதி செய்து கொடுக்க, நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *