May 13, 2021

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில், 13,200 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட இலக்கு, மாவட்ட பொறுப்பு ஆட்சியர் முத்துசாமி தகவல்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில் பூங்கா வளாகத்தில் 350க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கான முகாம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாக கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட வளாகம் மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள 8 தொழிற்சாலைகளில் கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் திட்ட அலுவலகத்தில் நடைபெறும் கரோனா தடுப்பூசி முகாமினை திருவள்ளூர் மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ், மாவட்ட பொறுப்பு ஆட்சியரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமி, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் ஆகியோர் தடுப்பூசி முகாமினை ஆய்வு செய்தனர்.

நிகழ்விற்கு, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் என்.மகேஷ், கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்கோவிந்தராஜ், மாவட்ட பயிற்சி மருத்துவர் டாக்டர் தீபாலட்சுமி, சிப்காட் திட்ட அலுவலர் சாய்லோகேஷ், மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளர் கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

அப்போது, கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டயில் மட்டும் 13,200 தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 1,16,058 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளதாகவும்.

இதுவரை, முக கவசம் அணியாமல் சுற்றி திரிந்த 7,55,923 பேரிடமிருந்து ஒரு கோடியே 12 லட்ச ரூபாய் அபராதமாக அளிக்கப்பட்டு உள்ளதாகவும் மாவட்ட கரோனா தடுப்பு கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் மற்றும் பொறுப்பு மாவட்ட அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான முத்துசாமி தெரிவித்தனர்.

நிகழ்வில், ஆய்விற்கு வந்த அதிகாரிகள் சிப்காட் தொழிற்பேட்டையில் நடைபெற்று
வரும் கரோனா தடுப்பூசி முகாம் குறித்து விசாரித்த போது கும்மிடிப்பூண்டியில்
வியாழக்கிழமை வரை 599 தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில், இன்று சிப்காட் திட்ட வளாகம் உள்ளிட்ட 9 தொழிற்சாலைகளில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில், 490 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும்,

இனி வரும் நாட்களில் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மகேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் தெரிவித்தனர்.

செய்தியாளர் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *