May 13, 2021

பொன்னேரியில்,
பெற்ற தாயை மகனே முட்புதரில் வீசி சென்ற கொடூர செயல்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஏலியம்பேடு கிராமத்திலுள்ள முள் புதர் ஒன்றில் இருந்து முனங்கல் சத்தம். வருவதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த சிலர் அங்கு சென்று பார்த்தபோது, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கேட்பாரற்ற நிலையில் நடக்கக் கூட முடியாத நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து, பொன்னேரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அந்த மூதாட்டியை மீட்டு அவசர ஊர்தி மூலம் பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், தமது பெயர் காந்திமதி எனவும், சொந்த ஊர் சென்னை மணலி சேக்காடு என்றும், கணவர் பெயர் ராதாகிருஷ்ணன் எனவும் தெரிவித்தார். தமக்கு ரவி, சங்கர் என்ற இரு மகன்கள் உள்ளதாகவும் இருவரும் கூலி வேலை செய்வதாகவும் தெரிவித்த அவர். தனது பிள்ளைகள் தன்னை சரிவர கவனிக்கவில்லை என்றும் தான் இருப்பதே பாரமாக கருதி தமது இரண்டாவது மகன் சங்கர் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து அழைத்து வந்து ஆள் நடமாட்டம் இல்லாத முள் புதரில் தம்மை தள்ளி விட்டு சென்றதாக வேதனையுடன் கூறினார்.

பெற்ற தாயை அரவணைக்காமல் இறக்கமின்றி மகனே அவரை முள் புதரில் வீசி விட்டுச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்ற தாயை காப்பகத்தில் சேர்ப்பதே கொடுமை என்றால், 80 வயதான தாயை முட்புதரில் தள்ளி விட்டு சென்ற சம்பவம், மனித தன்மை எங்கே சென்றுள்ளது என, நினைத்து மனம் பதறுகிறது.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *