May 12, 2021

பொன்னேரியில், நேதாஜி சமூக நல இயக்கத்தினர், மரக்கன்றுகள் நட்டு, மறைந்த நடிகர் விவேகிற்க்கு, அஞ்சலி…

1 min read

மறைந்த திரைப்பட நடிகர் விவேக்கிற்க்கு, பொன்னேரியில் அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் மரக்கன்றினை நட்டு அஞ்சலி செலுத்தினர். திரைப்பட நடிகரும், சுற்றுச் சூழல் மற்றும் சமூக நல ஆர்வலருமான, விவேக், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 4.30 மணியளவில் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், மரக்கன்றுகளை நடுதல், பிளாஸ்டிக் (நெகிழி) பைகளை தவிர்த்தல் உள்ளிட்ட சமூக பணிகளில் ஈடுபட்டு வரும், நேதாஜி சமூக நல இயக்கத்தின் சார்பில், அதன் அமைப்பாளர், ஸ்ரீதர்பாபு தலைமையில், தடப்பெரும்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பாபு உட்பட, அப்பகுதி இளைஞர்கள் இணைந்து மரக்கன்றுகளை நட்டு, அவரின் உருவப்படம் முன்பு அஞ்சலி செலுத்தினர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *