May 13, 2021

தடுப்பூசி பற்றி அவதூறு பரப்பியதாக, மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி அலுவலகத்தில் புகார், பத்திரிக்கையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம்…

1 min read

திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த தனியார் மருத்துவமனை வாயலில், நடிகர் விவேக் அவர்களின் இந்நிலைக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதே காரணமா? என்று, ஊடகத்தின் மூலம் நடிகர் மன்சூர்அலிகான் கேள்வி எழுப்பினார். இதனால், அவர் மீது தற்போது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகாருக்கு தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்,

“மன்சூர் அலிகான் அவர்கள் எழுப்பிய குரலை, பல பொது மக்களின் சந்தேகக் குரலாகவே நான் பார்கிறேன். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் தான் விவேக் இறந்து விட்டார் என்று எந்த ஆதாரமும் இல்லாமல், நான் சொல்ல முடியாது. ஆனால், மக்கள் மத்தியில் அப்படி ஒரு தகவல் பரவி, பலர் பீதியில் உள்ள நிலை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம், சுகாதார துறை சார்பில் போதுமான அளவு பொது மக்களுக்கு விளக்கம் அளிக்கப்படவில்லை, என்பது தான்.

விவேக் அவர்கள் மறைவு பல கேள்விகளை எழுப்பியது, அதற்கு முன்னதாகவே மன்சூர் அலிகான் அவர்களின் கேள்விகள் சமூக ஊடகங்களில் பரவி வந்தது. மறைந்த விவேக் அவர்களின் பிரேதத்தை பரிசோதனை செய்து இதற்கான ஒரு பதிலை சுகாதார துறை விளக்கம் தந்து, மக்களின் அச்சத்தை போக்கி இருக்கலாம். நேற்று வரை, “அனைவரும் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்” என்று, அறிவித்து வந்த சுகாதார துறை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள், இன்று ” ஊசி போட்டுக் கொள்வது அவர், அவர் விருப்பம் மட்டுமே, கட்டாயம் இல்லை ” என்று சொல்லி இருப்பது, குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் முன்பு அனைவருக்கும் உடல் பரிசோதனை செய்யப்படும், என்று கூட அரசு தரப்பில் இருந்து தகவல் வரவில்லை. இந்த சூழலில், சந்தேகங்களை எழுப்பிய மன்சூர் அலிகான் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுத்தால், அவருடைய கேள்விகளுக்கு சுகாதார துறையில் பதில் இல்லை என்றே நினைக்கிறேன். “இந்த செயலுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்” என, தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *