May 13, 2021

புதுக்கோட்டை வாக்கு எண்ணும் மையத்திற்குள், அனுமதி சான்று இல்லாமல், வேன் இரண்டு கருப்பு பெட்டியில் பல்வேறு டூல்ஸ்களுடன் நள்ளிரவில் வந்ததால் பரபரப்பு…

1 min read

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் தனித்தனி அறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவப் படையினர் மற்றும் காவல்துறையினர் என 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வேட்பாளர்களும் சார்பிலும் பூத் ஏஜென்ட் பவர் ஏஜன்ட் உள்ளிட்டோர் இரவு பகலாக தினசரி மூன்று சுற்றுகளாக பிரிக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்தில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவாகும் அறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று நள்ளிரவில் காவல் என்று எழுதப்பட்ட வேனில் இரண்டு கருப்பு பெட்டியில் பல்வேறு டூல்ஸ்களுடன் அனுமதி சான்று ஏதும் இல்லாமல் உள்ளே வந்துள்ளது. இதனை சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பார்த்து கொண்டிருந்த திமுகவைச் சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் கேட்டுள்ளனர். அதற்கு பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு டீ வாங்கிக் கொடுப்பதற்காக வந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர்.

காவல்துறையினர் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், சந்தேகமடைந்த திமுகவினர் இன்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லப்பாண்டியன் மற்றும் விராலிமலை தொகுதி திமுக வேட்பாளர் தென்னலூர் பழனியப்பன் உள்ளிட்டோர், மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து அனுமதி இல்லாமல் வாக்கு எண்ணும் மையத்தில் எப்படி காவல் என்று எழுதப்பட்டு இரண்டு பெட்டியில் பல்வேறு டூல்ஸ் உடன் வேன் வர முடியும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி புகார் மனு அளித்தனர். மேலும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்வோம் எனவும் தெரிவித்தனர்.

செய்தியாளர் – மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *