May 12, 2021

திருவண்ணாமலை, ஒலி ஒளி அமைப்பாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் விழாகளை அனுமதிக்க வேண்டி, கோரிக்கை மனு…

1 min read

தமிழ்நாடு டெண்ட் டீலர்ஸ் மற்றும் டெக்கரேட்டர்ஸ் நலச்சங்கம் சார்பில் தமிழக அரசு கட்டுப்பாட்டுடன் திருவிழாக்களை நடத்திக் கொள்ளவும், அரங்குகள் மண்டபங்களில் அனுமதிக்கப்பட்ட அளவில் 50 சதவீத நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி இடம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தமிழகம் முழுவதும் உள்ள பந்தல், மேடை, ஒலி ஒளி அமைப்பாளர்கள்,  சமையல் கலைஞர்கள், வாடகை பாத்திர பொருட்கள் உரிமையாளர்கள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் என சுமார் 5 லட்சம் பேர் உள்ளதாகவும், இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்பதால் திருமணம், திருவிழா அரங்குகள் மற்றும் மண்டபங்களில் தமிழக அரசு 50 சதவீத நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்குமாறு கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *