May 13, 2021

செங்குன்றத்தில், எம்.சேன்ட் ஏற்றி வந்த லாரியின் மீது, பொய் வழக்கு பதிந்த, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க மணல் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை…

1 min read

எம்-சேண்ட் ஏற்றி வந்த லாரி மீது பொய் வழக்கு பதிவு செய்து 16 மாதங்களுக்கு பின் நீதிமன்றம் விடுவித்த நிலையில், “வழக்கு பதிவு செய்த காவல் துறை மற்றும் வட்டாட்சியர் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

ராஜபாளையத்தில் இருந்து கடந்த 2019-இல் செங்குன்றம் வந்த லாரி ஒன்றை அப்போதைய பொன்னேரி வட்டாட்சியர் பறிமுதல் செய்து செங்குன்றம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.

ஆனால், எம்-சேண்ட் ஏற்றி வந்த லாரியை மணல் ஏற்றி வந்த லாரி என காவல் ஆய்வாளர் ஜவஹர் வழக்கு பதிவு செய்யப்பட்டதாக லாரியின் உரிமையாளர் நேரு என்பவர் தொடர்ந்த வழக்கில், 16 மாதங்களுக்கு பிறகு, நீதிமன்றம் லாரியை விடுவித்துள்ளது.

இந் நிலையில், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் மற்றும் சங்க நிர்வாகிகள், செங்குன்றம் சோதனைச்சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை நீதிமன்ற உத்தரவின்படி எடுத்து செல்ல வந்து ஆய்வு செய்தனர்.

ஆனால், “ஒன்றரை ஆண்டுகளாக ஒரே இடத்தில் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பழுதாகி லாரியை பயன்படுத்த முடியவல்லை எனவும், அதற்கு அப்போதைய வட்டாட்சியரும், காவல் ஆய்வாளரும் இழப்பீடு வழங்க வேண்டும்” என தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், “வட்டாட்சியர், காவல் ஆய்வாளர் ஆகிய இருவர் மீதும் துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *