May 13, 2021

திருவண்ணாமலையில், தண்ணீர் தேடி அலையும் “புள்ளிமான்களுக்கு குட்டை அமைத்து தண்ணீர் ஊற்றி வைக்க வேண்டும்” சமூக ஆர்வலர் கோரிக்கை…

1 min read

திருவண்ணாமலையில் கிரிவலப்பாதையில் காப்புக்காடு உள்ளிட்ட பகுதிகள் அதிகம் புள்ளிமான்கள் வசித்து வருகின்றன. இந்த புள்ளி மானுக்கு தேவையான உணவுகள் அந்தப் பகுதியில் உள்ளதால் இந்த உணவு சாப்பிட்டு அங்கே இருந்து வந்தன. தற்போது கோடைகாலம் என்பதால் உணவு மற்றும் தண்ணீர் இல்லாததால், புள்ளி மான்கள் காடு பகுதியில் முள் வேலி அமைக்கப்பட்டுள்ள பகுதியில் புள்ளிமான்கள் சுற்றி வருகிறது. மேலும், விவசாயிகள் தங்கள் காய்கறிகள் சரியான விலை கிடைக்கவில்லை என்றால் இதில் முள்ளங்கி, தக்காளி, கேரட் உள்ளிட்ட காய்கறிகளை அந்த பகுதியில் போட்டுவிட்டு செல்கின்றனர். அந்த பகுதியில் உள்ள புள்ளி மான்கள் இந்த காய்கறிகளை சாப்பிடுகிறது.

ஆனால், அந்த பகுதியில் தற்போது கோடைகாலம் என்பதால் தண்ணீர் இல்லாததால் ஊருக்குள் வர புள்ளிமான்கள் முயற்சிகின்றன. அப்போது நாய்களிடம் சிக்கி புள்ளி மான்கள் உயிர் இழக்க வாய்ப்பு உள்ளது. ஆகையால், இதனை கருத்தில் கொண்டு வனத்துறையினர் தற்காலிகமாக குட்டை அமைத்து அல்லது பிளாஸ்டிக் பைகளில் வைத்து தண்ணீரை ஊற்றி புள்ளிமான்களை காப்பாற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *