May 13, 2021

தமிழக அரசு அதிகாரிகள் சித்த மருத்துவத்தை புறக்கணிப்பது ஏன்? தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் டி.எஸ்.ஆர் சுபாஷ் கேள்வி…

1 min read

சென்ற ஆண்டு கொரானாவின் பரவல் உலகையே குலுக்கியது. இந்த சூழ்நிலையில் நமது இந்தியா முழுவதும் லட்சக்கணக்கானவர்கள் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு அல்லல்பட்டனர். இந் நிலையில் தமிழகத்திலும் தினமும் பல ஆயிரக்கணக்கானவர்கள் கொரேனாவால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு இருந்த சூழ்நிலையில், தமிழக அரசு சார்பில் சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களிலும் நூற்று கணக்கான சித்த மருத்துவர்களை கொண்டு, கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது.

அதன்படி, சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள ஜவஹர் பொறியியல் கல்லூரியிலும், வியாசர்பாடியில் உள்ள அம்பேத்கர் சட்டக் கல்லூரியிலும், சித்தமருத்துவ மருத்துவமனை அமைக்கப்பட்டு அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சித்த மருத்துவ மனைகளில் பல ஆயிரக்கணக்கான கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். அதில், குறிப்பாக ஜவகர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவர் வீரபாபு தலைமையில் அமைக்கப்பட்ட மருத்துவக்குழு 5,500க்கும் மேற்பட்ட நோயாளிகளை சிறந்த முறையில் சிகிச்சை அளித்து குணப்படுத்தினர். அதேபோல், வியாசர்பாடி பகுதியில் உள்ள அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனையில் மருத்துவர் சாய்சதீஷ் மற்றும் சித்தமருத்துவ குழுவினர்களும் சிகிச்சை அளித்ததில் குறிப்பிடத்தக்கது, அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் ஒருவர் கூட இறப்பை சந்திக்கவில்லை என்பது, மகிழ்ச்சி அடைய கூடிய விஷயம். இதே நிலைமை தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் அமைக்கப்பட்ட சித்த மருத்துவமனைகளில் நிலவியது.

இந்த சூழ்நிலையில், கொரோனாவின் கோரபிடி சிறிது தளர்ந்த நிலையில், கடந்த சில மாதங்களாக தமிழக அரசு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை தளர்த்தியது. மேலும், ஜனவரி மாதம் துவங்கி பல பண்டிகைகளும், திருவிழாக்களும், திருமணங்களும் மட்டுமில்லாமல், சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திலும் திரளான மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி திரிந்தனர். இந்நிலையில், கொரோனாவின் இரண்டாவது அலை மிக வேகமாக தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியா முழுவதிலும் 12க்கும் மேற்பட்ட மாநிலங்களில் மிக அதிகமாக பரவியுள்ளது. தமிழகம் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாதது மட்டுமில்லாமல், அவசர சிகிச்சைக்காக அளிக்கப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கூட தட்டுப்பாடு ஏற்பட்டு பல மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் உயிரிழக்கும் சூழ்நிலையும் நிலவுகிறது.

தமிழகத்திலும் கொரோனாவின் பாதிப்பு சென்ற ஆண்டை விட இந்தாண்டு பல மடங்கு கூடி, மக்களை அச்சுறுத்தி வரக்கூடிய இந்த சூழ்நிலையில், தினமும் தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா தொற்றின் கோரபிடியில் சிக்கி அவதிப்பட்டு வருகின்றனர். இந்த அவசரகால சூழ்நிலையிலும் சென்ற ஆண்டின் முதல் அலையின் போது பெரிய அளவில் மக்களை காப்பாற்றிய சித்த மருத்துவ மனைகளை இன்று வரை அரசு அதிகாரிகள் அமைக்காதது பொதுமக்களிடத்தில் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க கூட முடியாத சூழ்நிலையில், சித்த மருத்துவமனைகள் தற்காலிகமாக அரசு அமைத்தால் என்ன என்ற கேள்வி பரவலாக தற்போது எழுந்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்க மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்களிடம் நாம் கேட்டபோது, சென்ற ஆண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்ட பல ஆயிரம் மக்களை சித்த மருத்துவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் மாநிலம் முழுவதும் இரவு-பகல் என பாராமல் போராடி, அரசு அவர்களிடம் ஒப்படைத்த ஒருவர் கூட பெரிய அளவில் பாதிப்படைந்து, மரணிக்கும் நிலைக்கு போகாத சூழ்நிலையை உருவாக்கி, 100% அனைவரையும் காப்பாற்றி, அவர்கள் குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிகக் கொடூரமாக மக்களை தாக்கிக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், அரசு ஆங்கில மருத்துவத்தை மட்டுமே நம்பி இருப்பது ஏன்? என்ற கேள்வி எழுப்ப செய்கிறது.

பணம் படைத்தவர்கள் தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவு செய்து சிகிச்சை பெறுகின்றனர். பல லட்சக்கணக்கான ஏழை – எளிய மக்கள் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் கூட கிடைக்காமல் அல்லல் படுகின்றனர். இந்த சூழ்நிலையில் சென்ற ஆண்டு சிறப்பாக செயல்பட்ட இந்த சித்த மருத்துவமனைகள் அனைத்தையும் மீண்டும் அரசு திறக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். இந்த நிலைமை அரசு அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால், மக்களின் அலறல் குரல் கேட்டும் அமைதிகாக்கும் சூழ்நிலை நிலவுவது ஏன்? என்பது தான் தெரியவில்லை. நம்முடைய இந்திய மருத்துவத்தை தலைதூக்க விடாமல் செய்யப்படும் சூழ்ச்சியா? என்று நினைக்கத் தோன்றுகிறது. “சித்த மருத்துவமனை மையங்கள் வேண்டுமென கேட்டு பொதுமக்கள் வெளியில் வந்து போராடும் சூழ்நிலையை அரசு அதிகாரிகள் உருவாக்க வேண்டாம்.” என, கேட்டுக்கொள்கிறேன்.என கூறினார்.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *