May 13, 2021

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், சித்திரை வசந்த உற்சவத்தை முன்னிட்டு, உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்…

1 min read

நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், ஆண்டுதோறும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.

இதில், சித்திரை மாத வசந்த உற்சவம் உலகப் பிரசித்தி பெற்றது. 10 நாட்கள் மிகவும் விமர்சையாக இந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். நேற்று 7-வது நாள் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

வசந்த உற்சவத்தின் 7-வது நாளான இரவு உண்ணாமுலை உடனாகிய அண்ணாமலையாருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் ஆனந்த நடனம் ஆடி சம்பந்த விநாயகர் அருகே உள்ள மூன்றாம் பிரகாரத்தில் உள்ள பன்னீர் மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் மகிழ மரத்தினை பத்து முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

.

ஒவ்வொரு சுற்றிலும் மூன்று முறை பாவை என்று அழைக்கப்படுகின்ற பொம்மை அந்தரத்தில் மிதந்து வந்து தன் கையில் வைத்திருக்கும் பூக்கூடையில் இருந்து பல வாசனை மலர்களை அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு காற்றில் மிதந்தபடி பூ போடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் .

மற்ற சிவாலயங்களில் கந்தர்வ பொம்மை தான் சுவாமிக்கு பூ போடுவது வழக்கமாகக் கொண்டிருக்கிறது. ஆனால், அண்ணாமலையார் ஆலயத்தில் மட்டுமே சூடிக்கொடுத்த சுடர்கொடி என்று அழைக்கப்படுகின்ற ஆண்டாள் நாச்சியார் அம்சமான பாவை என்கிற பெண் பொம்மை அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மீது மலர்களைத் தூவுவது கண்கொள்ளாக் காட்சியாக நிகழ்கிறது.

இன்று பொம்மைக்கு கண்டாங்கி சேலை உடுத்தி தலை நிறைய மல்லிகை பூ வைத்து அன்னப்பட்சி ஜடை போட்டு அந்தரத்தில் ஆடி வந்து பொம்மை பூ போடும் நிகழ்வை பார்த்த குழந்தைகள் அனைவரும் ஆனந்தத்தில் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள். குழந்தைகளுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து அண்ணாமலையார் 10 முறை வலம் வந்து மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோயில் இணை ஆணையர் ஞானசேகரன் ஆலோசனையின்பேரில் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து வரும்படி உள்துறை மணியும் செந்தில் பக்தர்களுடன் அறிவுறுத்தி பக்தர்களுக்கு கொரொனா தொற்று காரணமாக இன்று முதல் சாமி அருகில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. சம்பந்த விநாயகர் சன்னதி முதல் உக்கிராணம் வரை தடுப்பு ஏற்படுத்தி பக்தர்கள் அங்கிருந்து சாமி தரிசனம் செய்யும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இந்த உற்சவத்தில் பிரபல திரைப்பட இயக்குனர் ராம்கி மற்றும் பாலா கோவில் சிவாச்சாரியார்கள் மற்றும் உள்ளூர் பக்தர்கள் பலர் கொரோனா தோற்று இரண்டாம் அலை காரணமாக குறைந்த அளவுபக்தர்களே கலந்து கொண்டு அண்ணாமலையாரை வழிபட்டனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *