May 14, 2021

இன்று, திருவண்ணாமலை கோயிலில் ஊரடங்கு தடைகளுக்கு இடையே நடைபெற்ற திருமணங்கள்…

1 min read

தமிழகத்தில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், முகூர்த்த நாள் என்பதால் முப்பதுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடக்க பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதனால் திருமண தம்பதிகளின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.

அண்ணாமலையார் கோவிலின் ராஜகோபுரம் முன்பு அடைக்கப்பட்டதால், திருமணத்திற்கு முன் பதிவு செய்த ஜோடிகளை கோவில் உள்ளே செல்ல கோயில் நிர்வாகம் அனுமதி மறுத்தது. காலை 6 மணி முதல் 7 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தும் அனுமதிக்காததால், திருமண வீட்டார் மற்றும் உறவினர்கள் கோவில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரிடம், “திருமணத்திற்காக முன்பதிவு செய்த புதுமணத் தம்பதிகளை கோயிலின் உள் செல்ல அனுமதிக்க வேண்டும்” என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு முற்றுகையிட்டனர்.

இதனிடையே, ஒரு சில திருமணங்கள் குறித்த முகூர்த்த நேரத்தில் ராஜகோபுரம் வெளியிலேயே கொடிமரத்தின் முன்பாக திருமணம் நடைபெற்றது. அதன் பிறகும் திருமணமான புதுமண தம்பதிகள் கோயிலின் உள் செல்ல அனுமதிக்க வேண்டுமென மீண்டும் போராடத் தொடங்கினர்.
பலத்த முற்றுகைப் போராட்டத்திற்கு பின்னர், கோவில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் திருமண ஜோடிகளுடன் பத்து நபர்கள் கோயிலினுள் செல்ல அனுமதித்தனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *