May 14, 2021

ஊத்தங்கரையில், தொண்டு நிறுவனங்கள் சார்பில், இலவச கண் பரிசோதனை முகாம் நடத்தபட்டது…

1 min read

ஊத்தங்கரை அரிமா சங்கம், சீனிவாச கல்வி அறக்கட்டளை, கோவை அரவிந்த் கண் மருத்துவமனை, கிருஷ்ணகிரி மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம் ஆகியோர் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடைபெற்றது.

முகாமை, ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி. திருமால் முருகன் துவக்கிவைத்தார். மாவட்ட கண்ணொளி திட்ட தலைவர் மருத்துவர் செந்தில் குமார், ஊத்தங்கரை அரிமா சங்க தலைவர் மருத்துவர் பத்மநாபன், செயளர் பிரகாஷ், தங்கவேல், பொருளாளர் ஆயிஷாதபு சம், அரிமா எம்.ஜே. எப் . ஆர். கே. ஹோட்டல் ராஜா, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆர். பி. ராஜி, பொருளாளர் நூருல்லாசரீப் , ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முகாமில், கண்புரை, சர்க்கரை நோய், கண்ணீர் அழுத்த நோய், குழந்தைகளின் கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை, உள்ளவர்களுக்கு கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அரிமா குணசேகரன், மணி, மூர்த்தி, மற்றும் ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்து 250க்கும் மேற்பட்டவர்கள் முகாமில், கலந்து கொண்டனர். அதில், 42 பேர் அறுவை சிகிச்சைக்காக கோவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *