September 23, 2021

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில், அதிமுக சார்பில், “நீர் மோர் பந்தல் திறப்பு விழா” நடைபெற்றது…

1 min read
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த கல்லாவியில், அதிமுக கட்சியின் சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடத்தப்பட்டது, நிகழ்ச்சிக்கு கல்லாவி ஊராட்சி மன்ற தலைவர் ராமன் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை வடக்கு ஒன்றிய செயலாளர் வேடி , தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ சி தேவேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் பி கே சிவானந்தம், மத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்கரவர்த்தி தெற்கு ஒன்றிய செயலாளர் தேவராஜ், தகவல் தொழில்நுட்ப அணி பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார், ஊத்தங்கரை சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் டி. எம். தமிழ்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்தனர். பொது மக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கல்லாவியில் நீர் மோர் பந்தல் திறப்பு விழாவில், பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிப்பிஞ்சு, ஜூஸ் என பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியில் ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், கல்லாவி ஊராட்சி செயலாளர் ரமேஷ், ஒன்றிய அவைத்தலைவர் சுப்ரமணி மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed