May 12, 2021

திருவண்ணாமலையில், ஊரடங்கால் மக்கள் நடமாட்டம் இல்லாமல், சாலைகள் வெறிச்சோடி போய் உள்ளது…

1 min read

தமிழகத்தில் இரண்டாவது முறையாக கொரோனா பரவி வருகிறது. இதனால் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. புதிதாக சிகிச்சை மையங்களும் அமைக்கப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று மட்டும் புதிதாக,
377 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி திருவண்ணாமலையில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அனைத்து வணிக நிறுவனங்களும் மூடப்பட்டன. இதனால் திருவண்ணாமலை நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

மேலும், தேவையின்றி வெளியில் வருபவர்களை போலீசார் எச்சரித்து வீட்டில் இருக்குமாறு அனுப்பி வைத்தனர்.
மருந்து கடைகளும், ஆவின் பாலகம் ஆகியவைகள் மட்டும் செயல்பட்டன. இன்று சுப முகூர்த்த தினம் என்பதால், சில
திருமண மண்டபங்களில் திருமணங்கள் நடைபெற்றன. அதில் குறைந்த அளவிலான நபர்களே கலந்து கொண்டனர். இந்த ஊரடங்கால் பூ வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், பழவியாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த ஊரடங்கு முதலுக்கே மோசம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும், அன்றாட பணிகளுக்கு சென்று அதில் கிடைக்கும் வருமானம் மூலம் குடும்பம் நடத்தும் கூலித்தழிலாளர்கள் வருமானம் இல்லாமல் என்ன செய்வது ?என்று கவலை அடைந்துள்ளனர். கொரோனா முடிவுக்கு வந்தால் மட்டுமே மக்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை காண முடியும் என்பது மறுக்க முடியாத உண்மை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *