September 23, 2021

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே, டாஸ்மாக் ஊழியரிடம் வழிப்பறி செய்தவர்களை உடனடியாக, கைது செய்த போலீசாரை, எஸ்.பி.ஜெயக்குமார் பாராட்டி பரிசுகள் வழங்கினார்…

1 min read
Spread the love

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அண்ணாநகர் காலனி பகுதியை சேர்ந்தவர் முருகன் (51). இவர் குளத்தூர் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த 12 ம் தேதி அன்று மது விற்ற தொகை 6 லட்சத்தி 13 ஆயிரம் பணத்தை கீழவைப்பாற்றில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக, முருகன் தனது இருசக்கர வாகனத்தில் எடுத்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது, கிழக்கு கடற்கரை சாலையில் முருகனை பின் தொடர்ந்து இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று மர்மநபர்கள் முருகனிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து, முருகன் அளித்த புகாரின் பேரில் குளத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் பிரகாஷ் அவர்கள் மேற்பார்வையில், குளத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) முருகன் தலைமையில் உதவி ஆய்வாளர் கங்கைநாத பாண்டியன், தலைமை காவலர் வடிவேல், முதல் நிலை காவலர்கள் செல்வகுமார் முத்துசேகர் மற்றும் ராசைய்யா ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து கொள்ளையடித்து சென்றவர்களை கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்டையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதிலும், அறிவியல்பூர்வமாக சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததின் மூலமும் மதுரை, முடக்கு சாலை இந்திரா ராணி மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த துரைக்கண்ணன் மகன் பாரத் (22), மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் மகன் முத்துஇருள் (29) மற்றும் தூத்துக்குடி மில்லர்புரம் வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்த குமார் மகன் மணிகண்டன் என்ற சுருட்டைமணி (23) ஆகியோர் டாஸ்மாக் ஊழியரான முருகனிடம் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்களில் ஒருவனான முத்துஇருள் மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலைய கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேற்படி, குற்றவாளிகள் பாரத் மற்றும் மணிகண்டன் என்ற சுருட்டைமணி ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களும், ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் விவேகமாகவும், விரைந்தும் செயல்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடித்து 3 இருசக்கர வாகனங்கள் மற்றும் ஒரு காரை பறிமுதல் செய்த தனிப்படையினரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் – இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed