May 14, 2021

கத்துவட்டி வசூல் செய்வது போல், மாஸ்க் வசூல் வேட்டையில் ஈடுபடும் திசையன்விளை காவல் ஆய்வாளர்…

1 min read

கொரோனா விழிப்புணர்வு இல்லாமல் மாஸ்க் வசூல் வேட்டையில் ஈடுபடும் திசையன்விளை காவல் ஆய்வாளரின் நடவடிக்கையால் பொதுமக்கள் கொரோனா பரவும் அச்சத்தில் உள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பரவல் அதிகரித்தது.
இதையடுத்து, கடந்த 2020 மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் கொரோனா நோய்தொற்று படிப்படியாக குறைந்து வந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி அரசியல் கட்சியினர் பல்வேறு கூட்டங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதால், நோய்தொற்று பரவலின் இரண்டாம் அலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்னர் அரசு மீண்டும் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஏப்ரல் 20ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் அரசு அமல்படுத்தியுள்ளது.

மேலும், அரசு துறையினரும் காவல் துறையினரும் பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் வந்தால் அவர்களிடம் அபராதம் விதித்து வருகின்றனர். இந்த அபராதம் விதிப்பு என்பது பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு பதிலாக, பல்வேறு இடங்களில் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, கொரோனா விழிப்புணர்வு இல்லாமல், மாஸ்க் வசூல் வேட்டையில் ஈடுபடும் திசையன்விளை காவல் ஆய்வாளர் சாய்லட்சுமி அவர்கள் தலைமையில் போலீசார் இரு சக்கர வாகனங்களில் முககவசம் அணியாமல் வருபவர்களிடம் இருந்து அபராதம் விதித்து வருகின்றனர்.

இதில், காவல் ஆய்வாளர் சாய்லட்சுமி அவர்கள் தண்டல் வசூலிப்பவர் போல் பாதுகாப்பாக வண்டியில் அமந்து கொண்டே, அபராதம் கட்டுவதற்காக இருசக்கர வாகனங்களில் வருபவர்களை திட்டியும், மிரட்டியும், ஜீப் அருகில் பாதுகாப்பு இல்லாத வகையில், சமூக இடைவெளியின்றி கூட்டமாக கூடி, வெகு நேரம் நிற்க்க வைத்து அபராத தொகையை வசூலித்து வருகிறார். அப்போது, அந்த இடத்தில் நின்று கொண்டிருந்த செய்தியாளர் செய்தி சேகரித்த போது பத்திரிக்கையாளரை மிரட்டும் வகையில் காவல் ஆய்வாளர் சாய்லட்சுமி அவர்கள் மற்றும் தலைமை காவலரும், ” எங்களிடம் கேட்காமல் எந்த செய்தியும் சேகரிக்க கூடாது” என்று ஒருமையில் பேசி திட்டியதுடன், மிரட்டும் வகையில், பத்திரிக்கையாளரை எங்கும் செல்ல விடாமல் தடுத்துள்ளனர். இந்த செயலை கண்டிக்கும் வகையில், மாவட்ட ஆட்சியாளர் அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் ஆய்வாளர் சாய்லட்சுமி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக கோரிக்கை வைத்துள்ளனர்.

“முகக் கவசம் அணிவது மட்டும் கொரானா பரவாமல் தடுக்க முடியாது. போதிய சமூக இடைவெளியும் அவசியம்” என்ற விழிப்புணர்வு திசையன்விளை காவல் ஆய்வாளருக்கு இல்லாதது குறித்து, சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செய்தியாளர் – வசந்த் குமார்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *