May 13, 2021

வேதாரண்யம் வட்டம் தேத்தாகுடி சுற்றுவட்டார பகுதிகளில், முககவசம் அணியாதவர்களுக்கு, அறிவுரையுடன், 200 அபராதம்…

1 min read

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், தேத்தாக்குடி தெற்கு மற்றும் வடக்கு மேலும் முக்கிய முச்சந்தி, சாலை சந்திப்பு இடங்களிலும், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள், வருவாய்துறை, காவல் துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக விழிப்புணர்வாக எடுத்துக்கூறியும், முககவசம்
அணிய வலியுறுத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு பணியின்போது முகக் கவசம் அணியாமல் வரும் பலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறியும், பலமுறை அந்த அறிவுரையை ஏற்காமல் அதே தவறை செய்து வரக்கூடியவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்து வருகின்றனர்.

மேலும், பேருந்துகளில் அதிக பயணிகளை ஏற்றக் கூடாது எனவும், அறிவுரை கூறுகின்றனர். அப்படி அதிக அளவில் பயணிகளை ஏற்றி வந்தாலும் கைகளை சுத்தம் செய்யக்கூடிய சாணிடேரியன்கள் இல்லாமல் இருக்கக்கூடிய பேருந்துகளுக்கு அபராதம் விதித்தனர்.

மேலும், திருமண வீடுகள் மற்றும் சுபகாரியங்கள் நடக்ககூடிய இடங்களுக்கும் சென்று சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியும், வரவேற்பு இடங்களில் சந்தனங்கள் போன்றவை வைக்கும் இடத்தில், கூடுதலாக முகக் கவசங்கள் மற்றும் சேனிடேரியன்கள் வைக்க அறிவுரை வழங்கினர்.

செய்திகள் –
நா.மணிவண்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *