September 23, 2021

திருவண்ணாமலை மாவட்டத்தில், ஒரு வருடமாக ஊதியமின்றி தவிக்கும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…

1 min read
Spread the love

திருவண்ணாமலை மாவட்டத்தில், தனியார் பள்ளிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. அதில், படித்து பட்டம் பெற்றவர்கள் ஆயிரக்கணக்கில் ஆசிரியர்களாக பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் அவர்கள் ஏற்கனவே குறைந்த ஊதியத்தை பெறுவதால் தங்கள் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒரு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாததால், வேலைவாய்ப்புகள் இழந்து பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வருவதால், அவர்கள் பள்ளி நிர்வாகத்திடமோ, மற்றவர்களிடமோ உதவி கேட்க முடியாத சூழ்நிலையில்,

எவ்விதமான உதவியும் இன்றி தவித்து வரும் தங்களுக்கு, தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்படுவது போல், மாதம் ரூபாய் 2000 நிதி உதவியும், 25 கிலோ அரிசியும் அரசு வழங்க வேண்டும் என, இன்று புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

செய்தியா – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed