May 13, 2021

மீஞ்சூர், சோமசுந்தரபேட்டை பழந்திரு கோவில் அருள்மிகு ஸ்ரீ சோமசுந்தரேஸ்வரர் ஆலயத்தில் தங்கள் கரங்களால் பொதுமக்கள் 108 இளநீர் அபிஷேகம் செய்தனர்…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சோமசுந்தரம் பேட்டையில் சீமாவரம் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள சுமார் 2000-ம் ஆண்டுகள் பழந்திரு கோவிலான அருள்மிகு ஸ்ரீ ki ஆலயத்தில் சித்ரா பௌர்ணமி தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாரணாசி காசி விஸ்வநாதருக்கு பக்தர்கள் தங்கள் கரங்களால் நேரடியாக அபிஷேகம் செய்வதைப் போன்று இந்த ஆலயத்திலும் பக்தர்கள் தங்கள் கரங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து வருகின்றனர். சித்ரா பவுர்ணமி தினமான இன்று108 இளநீர் காய்களைக் கொண்டு பக்தர்களின் கரங்களால் லிங்கவடிவான சோமசுந்தரேஸ்வரருக்கும், நந்திதேவருக்கும் அபிஷேகம் செய்தனர்.

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மதித்து முக கவசம் அணிந்து வரிசையில் சமூக இடைவெளியுடன் சுவாமியை வழிப்பட்டனர். அருள்மிகு சோமசுந்தரேஸ்வரர் அடியார்கள் என்.கே.குலசேகரன், ஆறுமுகம் ஆகியோர் வழிபாடுகளுக்கு உறுதுணையாக இருந்தனர்‌. நிகழ்ச்சி ஏற்பாட்டினை மீஞ்சூர் கணேசன் ஏற்பாடு செய்தார்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *