May 13, 2021

ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்…

1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில், நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் இன்று நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு சிங்காரப்பேட்டை பகுதி செயலாளர் வேலு தலைமை வகித்தார். ஊத்தங்கரை பகுதி செயலாளர் வரதராஜன், பகுதி தலைவர் தருமன், மாவட்ட குழு உறுப்பினர் மொளுகு , சுப்பிரமணி, சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தசாமி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

இதில், ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்த நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு 273 ரூபாய் கூலி வழங்கிட வேண்டும். 100 நாள் வேலைத்திட்டத்தில் சுழற்சி முறையை கைவிட்டு தினமும் வேலை வழங்கிட வேண்டும். கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 7,500 ரூபாய் வழங்க வேண்டும் என கோரி கோஷமிட்டனர். நிகழ்ச்சியில், எத்திராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *