July 31, 2021

சோழவரம் ஒன்றியம் நல்லூர் முதல் நிலை ஊராட்சியில், கண்காணிப்பு உதவி அலுவலகம், சிசிடிவி கேமரா துவக்க விழா…

1 min read

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஊராட்சி ஒன்றியம் நல்லூர் முதல்நிலை ஊராட்சிக்கு உட்பட்ட ஆட்டந்தாங்கலில், கண்காணிப்பு உதவி அலுவலகம் மற்றும் 60 சிசிடிவி கேமரா துவக்க விழா நடைபெற்றது. இந் நிகழ்ச்சிக்கு பொன்னேரி காவல் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ஜெ.கல்பனா தத் தலைமை தாங்கி கண்காணிப்பு உதவி அலுவலகத்தை திறந்து வைத்தார்.

நல்லூர் முதல் நிலை ஊராட்சி தலைவர் அமிர்தவள்ளி டில்லி, துணைத்தலைவர் செல்வி பாலகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்புரையாற்றினர். புழல் சரக உதவி ஆணையர் ஆர்.ஸ்ரீகாந்த், சோழவரம் காவல் நிலைய ஆய்வாளர் என்.எஸ். நாகலிங்கம் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து சிசிடிவி கேமராவை துவக்கி வைத்தனர்.

இதில், ஒன்றியக் கவுன்சிலர்கள் ரேவதி துரைவேல், கோமதி சீனிவாசன், வார்டு உறுப்பினர்கள் அம்சா பிரபு, ஜெகதீஸ்வரி ராமமூரத்தி, எஸ்.பாஸ்கரன், ரேவதி பெருமாள், அம்பிகா சிவா, ஆர்.ரேவதி, என்.கணேசன், என்.வேணுகோபால், ராஜலட்சுமி சக்கரவர்த்தி, என்.லோகநாதன், சரோஜா சுப்பிரமணி, பி.முருகன், பி.சீனிவாசன், சி.மகாலிங்கம் மற்றும் நல்லூர் ஊராட்சி மன்ற பொதுமக்கள், ஊர் பெரியவர்கள், சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஊராட்சி செயலர் வி.லோகநாதன் நன்றி நவின்றார்.

ரூ. 10 லட்சம் செலவில் கண்காணிப்பு உதவி அலுவலகமும், ரூ. 10 லட்சம் செலவில் சிசிடிவி கேமராவும் அமைக்கப்பட்டிருந்ததை அனைவரும் பாராட்டினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை கே.எம். டில்லி, பா.சுகுமார் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தியாளர் – ரெட்ஹில்ஸ் நண்பன், அபுபக்கர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed