July 31, 2021

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட தயாராகிறாரா ஓபிஎஸ்…

1 min read

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் அவர்களது இல்லத்தில் சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி உள்பட 3 பேர், அஇஅதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆசி பெற்றனர்.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போடிநாயக்கனூர் சட்டபேரவை தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெற்றி பெற்றார்.இதனையடுத்து 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றவர்களான கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பணஹள்ளி சட்டபேரவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டவருமான கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி.யும்,

கிருஷ்ணகிரி சட்டபேரவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டவருமான அசோக்குமார், ஊத்தங்கரை சட்டபேரவை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் தேர்வு செய்யப்பட்டவருமான தமிழ்செல்வம் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது அவர்கள் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடைபெற்றது.

செய்தியாளர் – அழகர்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed