August 1, 2021

திருவண்ணாமலையில், கொரோனா நோயாளிகள் உணவு, நோய் சக்தி மாத்திரைகள் வழங்காததை கண்டித்து, போராட்டம்…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் மூன்று இலக்க எண்ணில் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகள் பாதிக்கப்பட்ட பெரும்பாலான நபர்கள் திருவண்ணாமலை வேலூர் புறவழிச் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிட்டத்தட்ட 500க்கும் மேற்பட்ட கொரோனா தொற்றாளார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு மருத்துவமனை சார்பில், காலை உணவு 10 மணிக்கும் மதிய உணவு 3 மணிக்கு வழங்கப்படுவதாகவும், அதேபோல் இரவு உணவு 9 மணிக்கு தான் வழங்கப்படுவதால் பல நோயாளிகள் பசியால் தவித்து வருவதாகவும்,

நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகளை முறையாக வழங்குவது கிடையாது. நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டக்கூடிய கசாயம் உணவு வகைகள் வழங்குவது இல்லை எனவும், மருத்துவர்கள் நோயாளிகளிடம் பாதிப்பு குறித்து கேட்பதில்லை எனவும் கிருமிநாசினி உள்ளிட்டவை வழங்குவதில்லை கழிவறையில் போதுமான தண்ணீர் வசதி இல்லை என்றும், கழிவறை சுத்தம் செய்வது கிடையாது என்றும் என குற்றம் சாட்டி, கொரோனா தனிமை படுத்தப்பட்ட வார்டில் உள்ள 50க்கும் மேற்பட்ட நோயாளிகள் இன்று மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, நோயாளிகள் அனைவரும் மருத்துவமனைக்கு வெளியே சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதனையடுத்து மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினர் நோயாளிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி, குறித்த நேரத்தில் முறையாக உணவு வழங்கப்படும் என்றும் கழிவறைகளை சுத்தம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்ததன் பேரில் நோயாளிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் முறையான சிகிச்சை இல்லை என்றும் உணவு வழங்கவில்லை என போராட்டம் நடத்திய சம்பவம் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்- மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *