June 21, 2021

சென்னையில், கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min read

சென்னை கொளத்தூர் ரெட்டேரி மீன் மார்க்கெட் அருகே கஞ்சா கடத்தி வருவதாக அண்ணா நகர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் மஞ்சுளாவுக்கு ரகசிய தகவல் வந்தது.

தகவலின் பேரில் மது விலக்கு பிரிவு காவல் துறையினர் அதிரடியாக அப்பகுதியில் வாகன சோதனை மேற்கொண்டபோது கொளத்தூர் ரெட்டைஏரி மீன் மார்க்கெட் அருகே மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் சென்னை கொளத்தூர் செல்லியம்மன் நகரை சேர்ந்த கார் மெக்கானிக் அரவிந்த் ( 46) அவர் கொடுத்த தகவலின் பேரில் புத்தகரம் கணபதி நகர் பகுதியைச் சேர்ந்த ஆந்திரமாநிலத்தில் எல்எல்பி படித்து வரும் சுந்தர் ( 26 ) வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கூறியனார்.

அதன்படி, அங்கு சென்ற காவல் துறையினர், வீட்டில் இருந்த 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணையில் கடந்த 3 நாட்கள் முன்பு செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் சிக்னல் அருகே ஆந்திராவிலிருந்து வந்த இவரது நண்பர் மகேஷ் என்பவர் கடத்தி கொண்டு வந்து இவர்களிடம் கொடுத்ததாக தெரியவந்தது.

பிடிபட்ட கஞ்சாவை புழல் காவல் நிலையத்தில் ஒப்படைத்த காவல் துறையினர் சுந்தர் மற்றும் அரவிந்த் ஆகிய இருவரையும் கைது செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed