June 19, 2021

தூத்துக்குடியில் புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் அமலுக்கு வந்தன நகைக் கடைகள், ஜவுளிக்கடைகள் அடைக்கப்பட்டது…

1 min read

தமிழகத்தில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. அதன்படி அத்தியாவசிய பொருள்களை விற்பனை செய்யும் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்தை பொருத்த வரையில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடு விதிமுறைகளை கடுமையான முறையில் கடைபிடிப்பதற்காக தமிழக காவல்துறையின் சார்பில் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையிலான கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் முன்னிட்டு தூத்துக்குடியில் இன்று பகல் 11.45 மணிக்கெல்லாம் வணிகர்கள், டீக்கடைகள், சில்லறை வியாபாரக் கடைகள் அடைக்க தொடங்கினர். மாநகராட்சியின் முக்கிய சாலைகளில் உள்ள நகைக் கடைகள், துணிக்கடைகள், மற்றும் காய்கறி சந்தை உள்ளிட்டவைகளும் ஊரடங்கு விதிமுறைகளை பின்பற்றி அடைக்கப்பட்டது.

நகரத்திற்குள் தேவையற்ற போக்குவரத்தை தவிர்க்கும் பொருட்டு முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் சட்ட ஒழுங்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடியில் கரோனா பாதிப்பால் நாளொன்றுக்கு 740 பேர் வீதம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆரம்பநிலையில் நோய்த்தொற்று கண்டறியப்பட்டவர்கள் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சுகாதாரத்துறை மற்றும் செவிலியர்களால் கண்காணிக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது.

கரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் ஆக்சிஜன் படுக்கை தேவையுள்ளவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடுதல் படுக்கை வசதிகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed