June 21, 2021

உவரி காவல் நிலைய காவலர்கள் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, கபசுர குடிநீர் வழங்கினர்…

1 min read

உவரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உவரி காவல் ஆய்வாளர் செல்வி அவர்கள் மற்றும் காவலர்கள் பொதுமக்களுக்கு இரண்டாம் அலை கொரோனா வைரஸ் தொற்று குறித்து, தொடர்ந்து பல நாட்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று ஆணைகுடி விளக்கு பகுதியில் பொது மக்களுக்கு கொரோனா‌ தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. அப்போது அப்பகுதி வழியாக முககவசம் அணியாமல் வந்த குழந்தைக்கு காவல் ஆய்வாளர் அவர்கள் முககவசம் அணிவித்த செயல் மக்களின் மனதை கவர்ந்தது. மேலும் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் வழங்கியும், சமூக இடைவெளியை கடை பிடித்து நடக்கும் படி அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed