June 21, 2021

திருவண்ணாமலையில், தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த புள்ளி மான், நாய்கள் கடித்து பலி…

1 min read

திருவண்ணாமலை வனம் சார்ந்த பகுதியாக விளங்குகிறது. இங்குள்ள மலையில் ஏராளமான மான்கள் வசித்து வருகின்றன. அவைகளை பாதுகாக்கும் கிரிவலம் பாதையை ஒட்டி வனப்பகுதியில் வேலிகள் அமைக்கப்பட்டு உள்ளது . இந்த வேலி பாதி தூரம் மட்டுமே அமைந்துள்ளது.

இதனால் கோடைகாலத்தில் மான்கள் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காவிட்டால் குடியிருப்பு பகுதிக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. தற்போது கோடைகாலம் தொடங்கி அக்னி வெயில் அடித்து வருகிறது.
இந்த நிலையில் வனப்பகுதியில் தண்ணீர் கிடைக்காதால் ஒரு மான் மலையடிவாரத்தில் அமைந்துள்ள மக்கள் குடியிருப்பு பகுதிக்கு இன்று காலை வந்துள்ளது. அதனை, தெருநாய்கள் விரட்டி கடித்து உள்ளன. இதனால் தப்பி ஓடிய மான் திருவண்ணாமலை 10 -வது புது வாணியம் குளத்தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ பெரியநாயகி சமேத பெரியாண்டவர் ஆலயத்தில் சென்று தஞ்சமடைந்தது.

காயங்களுடன் கோவிலுக்குள் வந்த மானை பார்த்த கோவில் நிர்வாகிகள் இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் அளித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அந்த மானுக்கு சிகிச்சை அளிக்க கொண்டு சென்ற நிலையில் நாய்கடியால் படுகாயமடைந்து இருந்த மான் சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தது. அதனை வனத்துறையினர் வனப்பகுதிக்கு கொண்டுசென்று புதைத்தனர். இதை தொடர்ந்து வனப்பகுதியில் மேலும் பல இடங்களில் மான்கள் தண்ணீர் அருந்த குடிநீர் வசதி செய்ய வேண்டும் என்று வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed