June 17, 2021

தென்காசியில், சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த 11 நபர்கள் அதிரடி கைது…

1 min read

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுண சிங் அவர்களின் உத்தரவின் பேரில், மாவட்டமெங்கும் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இந் நிலையில், மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த 11 நபர்களை ரோந்து பணியில் இருந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 233 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *