June 19, 2021

தமிழகத்தின் விடியலை துவக்கி வைத்திருக்கிறார், முதல்வர் ஸ்டாலின்…

1 min read

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்த அதிமுக அரசின் பதவிக்காலம் நிறைவடைய இருந்ததால் தமிழகத்திற்கு புதிதாக சட்டமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டி, கடந்த மாதம் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அன்று நடைபெற்ற தேர்தலில் வாக்குகளை இந்த மே மாதம் இரண்டாம் தேதி என்னும் பணி நடைபெற்றது. அதில் அதிக பெரும்பான்மை பெற்ற திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்த சட்டமன்ற தேர்தலில், “ஸ்டாலின் தான் வராரு விடியல் தரப்போறாரு” என்ற தாரக மந்திரத்தை முன்னிறுத்தி திமுக, மக்களிடம் வாக்கு சேகரித்தனர். அதன்படி இன்று பொறுப்பேற்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முதன் முதலில், கொரோனா நிவாரண உதவி தொகை 4000 வழங்குவது, “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” திட்டத்தை துவக்கி, அதற்க்கு தனி துறையை நிறுவியது, பெண்களுக்கு இலவச பேருந்து வசதி, பால் விலை 3 ரூபாய் விலை குறைப்பது, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று முழு தொகையும் அரசு வழங்குவது, போன்ற 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த ஐந்து திட்டங்களுமே, தமிழக மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்திருப்பது என்பது உண்மை. இத் திட்டத்தை மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அடுத்ததாக அவர் தனக்குத் துணையாக தேர்வு செய்திருக்கும் முதல் 3 அதிகாரிகளை அடையாளம் கண்டு தமிழக மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருக்கின்றனர். காரணம், அவர்கள் அனைவரும் மிகவும் நேர்மையான திறமையான உறுதியுடன் செயல்படக்கூடிய அதிகாரிகள் என்பதால் தமிழக மக்கள், தமிழக முதல்வர் தேர்வு செய்திருக்கும் அந்த மூன்று அதிகாரிகளையும் நினைத்து தமிழக முதல்வருடைய செயல் திட்டங்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு எந்த அளவிற்கு சீரும் சிறப்புடனும் இருக்குமென்று நினைத்து மகிழ்ந்து உள்ளனர்.

அதற்குக் காரணம், தலைமைச் செயலாளராக முதல்வர் நியமித்துள்ள இறையன்பு ஐஏஎஸ் அவர்கள், அவர் துணை ஆட்சியராக பணி செய்யத் துவங்கிய நாகப்பட்டினத்தில் துவங்கி, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக இருந்தது வரையிலும் மற்றும் பல துறைகளில் செயலாளராக அவர் இருந்து சிறப்புடன் நேர்மையாக, செயல்பட்டதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அப்படிப்பட்ட நபரை இன்று தலைமைச் செயலாளராக தமிழக முதல்வர் தேர்ந்தெடுத்தது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

அதேபோல், முதல்வர் தனக்கு முதன்மை தனி செயளராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் உதயச்சந்திரன் ஐஏஎஸ், இவரும் மிகவும் நேர்மையான அதிகாரி என்பது மட்டுமில்லாமல் இவர் ஈரோடு மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது மிகவும் திறமையாக அந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்டார் என்பதும், தமிழகத்தில் கல்வித்துறையில் பெரும் புரட்சியை உருவாக்கும் அளவிற்கு புதிய பாடத்திட்டங்களை வகுத்து வடிவமைத்தவர் என்பதும், அதற்காக பலதரப்பட்ட கல்வியாளர்கள் அதிகாரிகள் அனைவருடைய ஆலோசனையையும் பெற்றது மட்டுமில்லாமல், மற்ற மாநிலங்களில் தங்கள் அதிகாரிகளை அனுப்பி அந்த மாநிலத்தில் உள்ள கல்வித்துறையில் நிறை,

குறைகளை எல்லாம் அறிந்து வரச் செய்து, அதன் பிறகு அவர்களுடைய அறிக்கைகள் எல்லாம் பரிசீலனை செய்து, தமிழகத்தில் ஒரு புரட்சிகரமான கல்வி திட்டத்தை வடிவமைத்தவர் என்பதை, நினைத்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் அந்தக் கல்வி திட்டங்கள் நடைமுறைப்படுத்த முடியாமல் இருந்த நிலையில் அப்படிப்பட்ட ஒரு நபரை முதல்வர் தனக்கு முதன்மை தனி செயலாளராக நியமித்து இருப்பது தமிழக மக்களுக்கு மற்றொரு மகிழ்ச்சி.

அதேபோல், தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு நேரடியாக, தான் உதவி புரிய வேண்டும், என்ற நோக்கத்தில் உருவாக்கபட்டது தான், “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள கிராம மக்களும் தங்களுடைய குறைகளை தமிழக முதல்வருக்கு நேரடியாக தெரியப்படுத்தும் விதமாக, புதியதாக துவங்கப்பட்டுள்ள திட்டமாகும். இந்த திட்டத்தை நிறைவுடன் செயல்படுத்த தமிழக முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ள நபர், தற்போது மக்கள் நல்வாழ்வு துறை இணைச் இயக்குனராக இருக்கக்கூடிய ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பவராவார். இவரும் மிக நேர்மையாகவும் திறமையுடனும் வேகமாக செயல்படக்கூடிய ஒரு சிறந்த அதிகாரியாவார் இவரைப் பற்றி கூற வேண்டுமென்றால்,

குறிப்பாக இவர் நெல்லையில் மாவட்ட ஆட்சியராக இருந்த போது தனது குழந்தையை பாளையங்கோட்டையில் உள்ள ஒரு அங்கன்வாடி பள்ளியில் சேர்த்து படிக்க வைத்திருக்கிறார் என்பதிலிருந்து, இவருடைய ஒட்டு மொத்த எண்ணமும், இயக்கமும் எப்படி இருக்கும் என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்து இருப்பார்கள் இப்படிப்பட்ட சிறந்த 3 திறமையான அதிகாரிகளை தமிழக முதல்வர் தன்னோடு இணைத்து பணி செய்ய தேர்வு செய்து இருப்பதினால், அடுத்த 5 ஆண்டில் தமிழகத்தினுடைய வளர்ச்சிப் பாதை எந்த அளவிற்கு தெளிவானதாகவும், உறுதியானதாகவும், வளர்ச்சிப் பணியை நோக்கி பயணிக்கும் என்பதை நினைத்து, தமிழக மக்கள் தங்களுக்கு “விடியல் பிறந்து விட்டது” என, நினைத்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

G பாலகிருஷ்ணன் / நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed