June 21, 2021

திருவள்ளூர் நகராட்சியில், அதிகாரிகளுடன் திருவள்ளூர் எம்எல்ஏ ராஜேந்திரன் ஆலோசனை நடத்தினார்…

1 min read

திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்திற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் வந்திருந்தார் இப்போது நகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளுடன் திருவள்ளூர் நகராட்சி உள்ள அடிப்படை பணிகள் குறித்தும் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் நகராட்சி அலுவலகத்தில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் திருத்தணி எம். பூபதி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, நகராட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் படத்தை நிறுவபட்டது..

நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர்ப் பிரச்சினைகள், பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் கையகப்படுத்துதல், உள்ளிட்ட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அறிவுறுத்தினார். அப்போது அவருடன் சி.சு.ரவிச்சந்திரன், எஸ். மகாலிங்கம், ரவீந்திரா, சி.ஜெ.சீனிவாசன், எஸ்.கே.ஆதாம், வி.கிஷோர்ரெட்டி, டி.தேவன், மனோகன், கைலாசம், இ.குப்பன், ரமேஷ் பாபு, பொன்.பாண்டியன், தி.ஆ.கமல கண்ணன், சி.சு.விஜயகுமார், பி.கே.நாகராஜ், பவானி, கு.பிரபாகரன், கே.ஜி.ஆர்.ராஜேஷ்குமார், டி.செல்வகுமார், வி.எஸ்.சதீஷ், ராயல் பாஸ்கரன், புட்லூர் குணா, கராத்தே நாகராஜ், ஜெய்.கிருஷ்ணன், பவளவண்ணன், டி.ஆர்.தினகரன், என்.கேசவன், பட்டரை பாஸ்கர், லோட்டஸ் கோபி, உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் – மகேஷ்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed