June 21, 2021

புழல் மத்திய சிறையில் தமிழக சட்டத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு, அடிப்படை வசதிகள் குறித்து கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்…

1 min read

சென்னை அடுத்த புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, மகளிர் என 3பிரிவுகள் உள்ளன. இதில் 100 பெண்கள் உட்பட சுமார் 1500க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அண்மையில் தமிழக சட்டத்துறை அமைச்சராக பதவியேற்ற ரகுபதி புழல் மத்திய சிறையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

சிறைகள், கைதிகளின் பாதுகாப்பு குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விளக்கினர். தொடர்ந்து கைதிகளிடம் சிறையில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் குறைகளை கேட்டறிந்தார். மேலும், சிறைத்துறை சார்பில் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கிலும் அவர் ஆய்வு நடத்தினார்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed