June 21, 2021

ஊத்தங்கரையில் கரோனா நோய் தொற்று குறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் திடீர் ஆய்வு…

1 min read

ஊத்தங்கரை பகுதியில் கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கரோனா நோய் தொற்று கட்டுப்பாடுகள் குறித்து, தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கண்ணன் அவர்கள் திடீெரென ஆய்வு செய்தார். ஊத்தங்கரை பேருந்து நிலையம், அருகே கிருஷ்ணகிரி சாலையில், ஒரே குடும்பத்தில் 6 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது.

தமிழக அரசு கரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனை பொதுமக்கள் கடைபிடித்து அத்தியாவசிய பொருட்களை வாங்க வரும், நபர்கள் மட்டும் வந்து வாங்கி செல்ல வேண்டும். இருசக்கர வாகனங்களில் காரணம் இன்றி சுற்றி திரியும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பேரூராட்சி பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் வரும் நபர்களை நிறுத்தி அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொற்றின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இறப்பு விகிதம் அதிகரித்து கொண்டே போகிறது. ஆகவே, பொது மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து காவல் துறைக்கும், மருத்துவதுறை, பேரூராட்சி பணியாளர்களுக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் கரோனா நோயை கட்டுப்படுத்த, ஊத்தங்கரை நகர பகுதி முழுவதும், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் மூலம், கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெறும் என கூறினார். உடன் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சி செயல் அலுவலர் மதியழகன், இளநிலை பொறியாளர் பழனிசாமி, இளநிலை உதவியாளர் சேகர், பதிவரை எழுத்தர் சென்பகபாண்டியன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செய்தியாளர் – பழனி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed