June 21, 2021

திருவள்ளூரில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளில் பணியாற்றி வந்த, பெண் மருந்தாளுநர் கொரோனாவால் உயிரிழந்தார்…

1 min read

திருவள்ளூர் பகுதியை சேர்ந்தவர் ஷபிலா(34). இவர் கடந்த 5 ஆண்டுகளாக மத்திய அரசின் குழந்தைகள் நல திட்டத்தின் கீழ் மருந்தாளுநராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்துள்ளார். திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் உள்ள வட்டார மருத்துவ மனையில் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படுபவர்களுக்காக உதவுவது, டெங்கு காய்ச்சல் நேரத்தில் நோய்த்தொற்று பரவாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளில் ஈடுபடுவது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாக, கொரோனா நோய் தொற்று காரணமாக கிராமம் கிராமமாக சென்று தடுப்பூசி செலுத்துவது, கொரோனா பரிசோதனை செய்வது போன்ற பணிகளில் கடம்பத்தூர் வட்டார மருத்துவ மனையில் பணியாளர்களுடன் இணைந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி இவருக்கு தொற்று உறுதியானது. சென்னை தாம்பரம் சானிடோரியம் மருத்துவ மனையில் 5 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். ஆனால் மாவட்ட சுகாதாரத்துறை சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலோ யாரும் இதுவரை கண்டு கொள்ளவில்லை என அந்தப் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்து உள்ளது வேதனையளிக்கிறது.

G.பாலகிருஷ்ணன்
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed