June 21, 2021

ஊத்தங்கரையில், சர்வதேச செவிலியர் தினத்தில் நைட்டிங்கேல் விருது வழங்கபட்டது..

1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு நைட்டிங்கேல் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலர் கொ. மாரிமுத்து தலைமை தாங்கினார்.

செவிலியர்களின் தன்னலமற்ற சேவை பணியை பாராட்டி ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஜேஆர்சி கு.கணேசன் செவிலியர்களுக்கு நைட்டிங்கேல் விருது வழங்கி வாழ்த்தினார்.

அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் சாந்தி, வடிவு, விஜயா, அலமேலு, ஜெயந்தி, அமுதவள்ளி, யோகலட்சுமி, பவ்யா, அரவிந்த்கொடி, அஸ்வினி, சாமுண்டீஸ்வரி, வரலட்சுமி ஆகியோருக்கு நைட்டிங்கேல் விருதை ஆசிரியர் கணேசன் வழங்கினார்.
மாஸ்க் அணிந்தும் மற்றும் சமுக இடைவெளியுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.

செய்தியாளர் – பழனி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed