June 17, 2021

ஊத்தங்கரையில், தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், கபசுரக் குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது…

1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் தமிழக ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பில், கபசுரக் குடிநீர் மற்றும் முக கவசம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஹையர் கூட்ஸ் ஓனர்ஸ் அசோசியேசன் சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ், பொருளாளர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் பழனி, செயற்குழு உறுப்பினர் யூசுப், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினர். தொடர்ந்து ஊத்தங்கரை பகுதி முழுவதும் வாகனத்தில் சென்று பொதுமக்களுக்கு கபசுர நீர் வழங்கிய போது மக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கியும் வருகின்றனர்.

செய்தியாளர் – பழனி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *