September 24, 2021

ஊத்தங்கரை நகரப்பகுதியில், தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரம்…

1 min read
Spread the love

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தேர்வுநிலை பேரூராட்சிக்கு உட்பட்ட நகரப்பகுதிகளில் பேரூராட்சி செயல் அலுவலர் மதியழகன் தலைமையில் கிருமிநாசினி தெளிக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்தும் விதமாக தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் அரசு மருத்துவமனை பேருந்து நிலையம் நான்கு முனை சந்திப்பு கல்லாவி ரோடு சேலம் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் தீயணைப்பு வாகனத்தின் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

செய்தியாளர் – பழனி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed