June 19, 2021

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில், தூக்கில் இறந்த நிலையில் கிடந்த பெண் யார்? அது கொலையா? தற்கொலையா? என போலிசார் தீவிர விசாரணை…

1 min read

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் திருநேர் அண்ணாமலை கோயில் அருகே, உள்ள மரத்தில் இன்று புதன்கிழமை காலை ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தூக்கில் தொங்கியபடி இறந்து கிடந்தார். அதை அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள், பார்த்து அதிர்ச்சி அடைந்து, இது குறித்து கொடுத்த தகவலை அடுத்து, திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று, மரத்தில் தொங்கிய பெண்ணின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பெண் யார்? இந்த இடத்தில் வந்து இறந்து கிடைப்பதற்கான காரணம் என்ன என்றும், அவர் கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்டாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed