June 21, 2021

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர், காவலர்களுக்கு அறிவுரைகளுடன் உதவிகள் வழங்கி வருகிறார்…

1 min read

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமாள் அவர்கள் மாவட்டம் முழுவதும் பணியாற்றும் காவலர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பலமுயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையத்திலும் களத்தில் பணியாற்றும் காவலர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும், பாதுகாப்பு அளிக்கும் வகையிலும், துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆய்வாளர்கள், அவர்களை பாதுகாத்திட வேண்டும் என அறிவுரை வழங்கியதன் பெயரில்,

ராஜபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில், ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் சரவண தேவேந்திரன் அவர்கள் தனது காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களுக்கும் இந்த கொரோனா காலத்தில், மக்களிடம் நல்ல அணுகுமுறையுடனும், பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்தும், அறிவுரை வழங்கி வருவதுடன் அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை தனது சொந்த செலவில் முககவசம், கையுறைகள் போன்றவை வழங்கியும் வருகிறார்.

மேலும், காவலர்களுக்கு மட்டுமில்லாமல் காவலர்களுடைய குடும்பங்களுக்கும் உதவும் வகையில் காவலர் குடியிருப்பில் இருக்கக்கூடிய அனைவருக்கும் முககவசங்கள் மற்றும் மோர் போன்ற உதவிகளை வழங்கியும், வீடு வீடாகச் சென்று கொரோனா பாதுகாப்பு குறித்த அறிவுரை வழங்கி வருகிறார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed