June 17, 2021

ஆறுமுகநேரியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும், காவலர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது…

1 min read

ஆறுமுகநேரி காவலர் குடியிருப்பில் இன்று கொரோனா தடுப்பூசி போடுவது சம்பந்தமாக காவலர் குடும்பங்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருச்செந்தூர் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங் அவர்கள் ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள் பங்கேற்றனர்.

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, துணை கண்காணிப்பாளர் ஹர்ஸ் சிங் அவர்கள் உரையாற்றுகையில், “இந்த கொரோனா தொற்று பரவல் காலத்தில் பொது மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்க கூடியவர்கள் நமது காவலர்கள், காவலர்கள் பணியாற்றினாலும் அவர்கள் வெளியில் சென்று வருவதினால் அவருடைய குடும்பத்தாரும் தொற்று பரவவில் இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. ஆகவே, காவலர் மட்டும் அல்லாமல், அவர்களுடைய குடும்பத்தார் அனைவரும் விழிப்புடன் இருப்பது அவசியமாகிறது” என கூறினார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *