June 17, 2021

கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு ஓபிஜி தொழிற்சாலை மூலம் 8 ஆக்சிஜன் செறிவூட்டிகள்-எம்எல்ஏ வழங்கினார்…

1 min read

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள ஓபிஜி தொழிற்சாலையின் சமூக பணி திட்டத்தில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 8 ஆக்சிஜன் செறிவூட்டிகளை கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் வழங்கினார்.

கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கடந்த 2 நாட்களாக கும்மிடிப்பூண்டியில் ஆக்சிஜன் படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மருத்துவமனையை உருவாக்குவது குறித்து தமிழக சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்திடம் பல்வேறு கோரிக்கைகளை வைத்ததோடு இது குறித்து மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர்லால் ஆகியோருடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

இந்நிலையில், கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கும்மிடிப்பூண்டி கோட்டக்கரையில் உள்ள அரசு பொது மருத்துவமனையை ஆய்வு செய்தல், மற்றும் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிப்பேட்டையில் உள்ள ஓபிஜி தொழிற்சாலையின் சமூக பணி திட்டத்தின் கீழ் 6லட்சம் ரூபாய் மதிப்பிலான 8 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், மாவட்ட சுகாதார பணி இணை இயக்குனர் டாக்டர் ராணி, ஓபிஜி நிறுவன தலைவர் முருகேஸ்வரன், மனித வள தலைமை மேலாளர் சுரேஷ், தொழிற்சாலை தலைவர் சபரீ ஆகியோர் முன்னிலையில் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு 8 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினார்.

இது குறித்து பேசிய, ஓபிசி நிறுவன மனித வள தலைமை மேலாளர் இந்ந ஆக்சிஜன் செறிவூட்டிகள் மூலம் லேசான கரோனா பாதிப்புள்ள நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்கி அவர்களை ஆபத்து கட்டத்தில் இருந்து மீட்டு பின் எளிதில் குணமாக்கலாம் என்றார். நிகழ்வில் பேசிய, எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் ஓபிஜி நிறுவனத்தின் சேவையை பாராட்டியதோடு இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகளை கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை ஊழியர்கள் உரிய முறையில் மக்கள் பயன்பெற செய்ய வேண்டும் என்றதோடு, கும்மிடிப்பூண்டியில் உள்ள 8ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இது போன்று ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடனான படுக்கைகள் கொண்ட கரோனா சிகிச்சை மையம் ஆரம்பிப்பது குறித்து கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் டாக்டர் ராணி, வட்டாட்சியர் ந.மகேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டாலின், டிஎஸ்பி ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோவிந்தராஜ் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூரில் செயல்பட்டு வரும் கரோனா சிகிச்சை மையத்திற்கு சென்று அங்கு நோயாளிகளுக்கு தரப்படும் சிகிச்சை, வதிகள் குறித்து ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக ஒன்றிய துணை செயலாளர் திருமலை, பாஸ்கரன், நகர செயலாளர் அறிவழகன்,ரமேஷ், நாகராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

செய்திகள் – சுடர்மதி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *