June 21, 2021

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் பூ மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா பரிசோதனை…

1 min read

திருவண்ணாமலை மாவட்டத்தில், கொரோனா முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையிலும் கொரோனா பரவல் குறையவில்லை. நேற்று மாவட்டம் முழுவதும் மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் பலியாகி உள்ளார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையத்தில் தற்காலிக பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் காலை ஏராளமான விவசாயிகளும் வியாபாரிகளும் குவிகின்றனர். இதன் மூலம் பூ மார்க்கெட் வியாபாரிகள் கொரோனா பரவ அதிக வாய்ப்பு உள்ளது என்பதால் இன்று காலை பூ வியாபாரிகளுக்கு பஸ் நிலையவளாகத்தில் முகாம் அமைத்து அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அப்போது உடல் வெப்ப பரிசோதனை மற்றும்
சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. முகாமில் வியாபாரிகள் தாமாக முன்வந்து பரிசோதனைகள் செய்து கொண்டனர். இதன் மூலம் வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உள்ளதா? இல்லையா ?என்பது உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. என்னதான் அரசு நடவடிக்கை எடுத்தாலும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் கொரோனாவை வெல்ல முடியும் என்பதில் ஐயமில்லை.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed