June 19, 2021

தூத்துக்குடி மாவட்டத்தில், முன்கள பணியாளர்களான பத்திரிகையாளர்களுக்கு, தடுப்பூசி போடும் முகாமை, கனிமொழி எம்பி துவங்கி வைத்தார்…

1 min read

கொரோனா நோயை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது மட்டுமின்றி பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் தூத்துக்குடியில் பணியாற்றக்கூடிய முன்கள பணியாளர்களான பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தடுப்பூசி போடும் முகாம் தூத்துக்குடியில் உள்ள சென்மேரிஸ் பள்ளியில் வைத்து நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த தடுப்பூசி போடும் முகமை பாராளுமன்ற திமுக குழு துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்பி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு இந்த முகாமை துவக்கி வைத்தனர்.

அதைத் தொடர்ந்து ஏராளமான பத்திரிகையாளர்கள் ஊடகவியலாளர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதைத்தொடர்ந்து செய்தியாளரிடம் பேசிய கனிமொழி எம்பி, தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 80,000 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், அதிக அளவிலான நபர்கள் தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடமாடும் தடுப்பூசி மையம் மூலமாக நகர்ப்புறங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ள கிராமப் புறங்களில் நடமாடும் தடுப்பு மையம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகர திமுக செயலாளர் ஆனந்த சேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed