June 19, 2021

மீஞ்சூர் ஒன்றியத்தில், கொரோனா பெருந்தொற்றை தடுப்பது குறித்து, 55 ஊராட்சி மக்கள் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது…

1 min read

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய 55 ஊராட்சி மக்கள் பிரதிநிதிகளுக்கான, ஆலோசனை கூட்டம் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் வேதநாயகம் தலைமையில் நடைபெற்றது.

பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் ரவி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். மீஞ்சூர் வட்டாரத்தில் சுகாதார பணிகள் குறித்தும், கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் விளக்கமளித்தார்.

ஒவ்வொரு ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்கள், சுகாதார பணியாளர்களுடன் சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர் மற்றும் சேர்மன் ரவி ஆகியோர் ஆலோசனை நடத்தினர். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்ற சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாதுகாப்பான முறையில் பணிகளை மேற்கொள்ள கேட்டு கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், வட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி, பொன்னேரி பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு, மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் சதிஷ், மற்றும் மீஞ்சூர் ஒன்றியத்துக்குட்பட்ட 55 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கலந்துக் கொண்டனர்.

செய்தியாளர் – பூர்ணவிஷ்வா
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed