June 21, 2021

மீஞ்சூர் வட்டார அரசு மருத்துவமனையில், பொன்னேரி எம்எல்ஏ துரை சந்திரசேகர் ஆய்வு செய்தார்…

1 min read

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் தாக்கம் அதிகளவில் உள்ள சூழ்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கொரோனோ எதிர்த்து களத்தில் நின்று மக்களுக்கு பணியாற்ற வேண்டுமென, அறிவுரை வழங்கி உள்ளார்.

அதன்படி, பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் மீஞ்சூர் வட்டார அரசு மருத்துவமனையில், ஆய்வு மேற்கொண்டார். மேலும், மீஞ்சூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஷ் மற்றும் மருத்துவ குழுவினருடன் ஆலோசனையும் நடத்தினார்.

அப்போது மீஞ்சூர் வட்டாரத்தில் அடங்கியுள்ள, பழவேற்காடு உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் கொரோனா தொற்று பரவலின் நிலைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், கிராம மக்கள் தொற்றால் அதிகளவில் பாதிக்காமல் இருக்க வேண்டி, ஆக்ஸிஜன் இருப்பு மற்றும் மருத்துவ உதவிகள் நிலை குறித்து கேட்டறிந்தார். அப்போது அவருடன் மீஞ்சூர் வட்டார வளர்ச்சி ஆணையர் வேதநாயகம், மீஞ்சூர் ஒன்றிய ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ரவி, மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.கே ரமேஷ்ராஜ், மீஞ்சூர் நகரச் செயலாளர் மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் மணி, திமுக ஒன்றிய அவை தலைவர் கா.சு. தன்சிங், பத்திரிகையாளர் மற்றும் சமூகஆர்வலர் அபூபக்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed