June 17, 2021

கொடைக்கானல் மலை சாலையில், விழுந்து கிடந்த மரங்களை திமுக நிர்வாகிகள் அப்புறப்படுத்தினர்…

1 min read

அரபிக் கடலில் உருவாகியிருக்கும் டவ்தே புயலின் காரணமாக தமிழகத்தின் 8 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டவ் தே புயலின் காரணமாக, தமிழ்நாட்டை பொருத்தவரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும். பிற மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந் நிலையில்,
கொடைக்கானல் மேல்மலை பகுதிகளில் பலத்த காற்றுடன் இடைவிடாது மழை பெய்தது, காற்றின் வேகத்தில் பல இடங்களில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்து கிடந்தன. அப்படி கிளாவரை சாலையில் விழுந்து கிடந்த மரங்களை, திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட குழு உறுப்பினர் சுரேஷ் பாண்டி மற்றும் அவருடன் வந்திருந்த அக்கட்சியை சேர்ந்தவர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து, சாலையில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

More Stories

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *