June 17, 2021

கோவில்பட்டியில், எட்டாம் வகுப்பு மாணவி, முதல்வர் கொரோனா நிதிக்கு, தான் சேமித்த 1,970 – ரூபாயை கனிமொழி எம்.பி-யிடம் வழங்கினார்…

1 min read

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையை போக்க தமிழக அரசு பல இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளையும், மருந்துவ மற்றும் நிவாரண உதவிகளையும் மக்களுக்கு செய்து வருகிறது. அந்தப் பணிகள் தடையின்றி நடைபெற, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழக மக்களுக்கு உதவும் வகையில், கொரோனா நிதி வழங்குமாறு தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு செய்யும் எண்ணம் கொண்டவர்களுக்கு, வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையறிந்த, கோவில்பட்டி வேல்ஸ் வித்தியாலையாவில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவி ரிதனா (13) தனது தாய், தந்தை இருவரும் தன்னுடைய செலவுக்காக, கொடுத்து இருந்த பணத்தை சேமித்து வைத்திருந்தார். இந்நிலையில், கடந்த ஆண்டு அவருடைய தந்தை நாகராஜ் திடீரென மாரடைப்பால் இறந்து போனார். தான், தந்தையின் ஆதரவை இழந்ததை உணர்ந்து வேதனையில் இருந்தார். இந்நிலையில், கொரோனாவின் பாதிப்பால் தன்னைப் போன்ற பல மாணவ-மாணவிகள் தாய் தந்தையை இழந்து அவதிபடுவதை கேள்விப்பட்டு மிகவும் மனம் வருந்தினார். இந்நிலையில், முதல்வருடைய வேண்டுகோளை கேள்விப்பட்ட மாணவி ரிதனா, தான் சேர்த்து வைத்திருந்த 1,970 ரூபாயை, முதல்வரின் கொரோனா நிதிக்கு வழங்க முடிவு செய்தார்.

இதற்கிடையே, இன்று அவர்களுடைய கோவில்பட்டி பகுதிக்கு முதல்வர் அறிவித்த முதல்கட்ட கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாயை வழங்குவதற்காக, தூத்துக்குடி எம்.பி கனிமொழி அவர்கள் வந்திருப்பதை அறிந்து, தான் முதல்வருக்கு அனுப்ப வைத்திருந்த நிதியை, எம்பி கனிமொழி அவர்களிடம் வழங்கினார். மாணவியின், சிறிய இதயத்தில் உருவான இந்தப் பெரிய உதவும் எண்ணம், கனிமொழி எம்பி அவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது. எம்பி கனிமொழி அவர்கள் மற்றும் சமூக நலதுறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் மாணவி ரிதனா-வை பாராட்டினர், நிதியை பெற்று கொண்ட எம்பி கனிமொழி அவர்கள் தமிழக முதல்வரிடம் கொண்டுபோய் சேர்ப்பதாக உறுதியளித்தார்.

செய்தியாளர் – ஜெகதீஸ்வரி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *