October 24, 2021

திருவண்ணாமலையில், சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம் சார்பில், முன்கள பணியாளர்களுக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கினர்…

1 min read
Spread the love

திருவண்ணாமலையில் அமைந்திருக்கும் சேஷாத்ரி சுவாமிகள் ஆசிரமம், தற்போது அதிகரித்துவரும் கொரோனா தொற்றுத் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கு உதவி வருகின்றனர். ஆசிரமத்தின் நிர்வாகியான ஓய்வு பெற்ற நீதியரசர் ராமநாதன் அவர்கள் இதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார். முதற்கட்டமாக ஆசிரமத்தின் மூலம் PPE எனப்படும் முழுகவச உடைகள் மற்றும் முகக்கவசங்கள் வாங்க முயற்சி எடுக்கப்பட்டு, நகராட்சி தகன எரிவாயு கூடத்திற்குத் தேவையான முழுகவச உடைகள் மற்றும் முகக்கவசங்கள் நகராட்சிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தருவிக்கப்படும் முகக்கவசங்கள் முன்களப்பணியாளர்களுக்கு வரும் நாட்களில் வழங்கப்படும் என மேலாளர் சேதுராமன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் – மூர்த்தி
நிழல் . இன் – 8939476777

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed